ராஜஸ்தான் தேர்தல் 2023: ராஜஸ்தானில் தற்போதுள்ள காங்கிரசின் ஆட்சி தொடருமா? அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா? இதற்கான விடை இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். வியாழனன்று வெளியான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 96 இடங்களும், பாஜக -வுக்கு 90 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 13 இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் முழு நம்பிக்கையில் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சியை பிடித்தால், முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார்? தேர்தல் பிரச்சாரங்களின் போதும், கட்சி முதல்வர் வேட்பாளரை பற்றி எதுவும் தெளிவாக தெரிவிக்கவில்லை. எனினும், பாஜக ஆட்சி அமைத்தால், முதல்வர் பதவிக்கான போட்டியில் சில தலைவர்கள் முன்னணியில் உள்ளனர். வசுந்தரா ராஜே, சிபி ஜோஷி, பாபா பாலக்நாத், தியா குமாரி, மஹந்த் பிரதாப் பூரி மகாராஜ் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.


வசுந்தரா ராஜே (Vasundhara Raje)


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் வசுந்தரா ராஜே தொடர்ந்து பிரபலமடைந்து வந்தார். எனினும், இது தற்போது பாஜக மேலிடத்தின் கருத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை. டிசம்பர் 3 ஆம் தேதி கட்சி பெறும் இடங்களின் எண்ணிக்கையை பொறுத்து அவரது முதல்வர் பதவி குறித்து தீர்மானிக்கப்படலாம். குறைவான இடங்கள், அதாவது சுமார் 95-100 இடங்கள் பாஜக -வுக்கு கிடைத்தால், உயர்மட்டத் தலைவர்கள் தீவிர மறுபரிசீலனையில் ஈடுபடக்கூடும். ஏனினும், மாநில வாக்காளர்களுக்கு பிடித்தமான ஒரு தலைவரைப் புறக்கணிப்பது 2024 மக்களவைத் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம். 


சிபி ஜோஷி (CP Joshi)


முதல்வர் போட்டியில் முன்னணியில் இருக்கும் மற்றொரு முக்கிய பெயர் சித்தோர்கர் எம்.பி மற்றும் மாநில கட்சி தலைவர் சிபி ஜோஷி. தனது சுத்தமான ஆளுமை மற்றும் பிராமண அடையாளத்துடன், ஜோஷி மேவார் பிராந்தியத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை தீர்க்க முடியும். இது வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு மூலோபாய ரீதியாக முக்கியமானது.


மேலும் படிக்க | Rajasthan Election Results 2023 Live: ராஜஸ்தானில் ஆட்சி யாருக்கு? சிறிது நேரத்தில் தொடங்கும் வாக்கு எண்ணிக்கை


பாபா பாலக்நாத் (Baba Balaknath) 


உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தை நினைவுபடுத்தும் வகையில், பாபா பாலக்நாத் ராஜஸ்தானில் ஒரு தனித்துவமான தலைவராக உருவெடுத்து வருகிறார். அவர் முதல்வராகும் சாத்தியமும் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி மற்றும் உ.பி.யில் உள்ள யாதவ் வாக்காளர்களிடையே அவரது செல்வாக்கு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாய்ப்புகளுக்கு கணிசமாக உதவலாம். 


தியா குமாரி (Diya kumari) 


ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசான தியா குமாரி மற்றொரு சாத்தியமான முதல்வர் வேட்பாளராக உள்ளார். அவரது பெண்ணிய அடையாளம், இளமை, அரசியல் சர்ச்சைகளில் சிக்காத நிலை மற்றும் கட்சியை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை அவரை மோடி மற்றும் அமித் ஷாவுக்கு சாதகமான தேர்வாக ஆக்குகின்றன.


மஹந்த் சுவாமி பிரதாப் பூரி மகாராஜ் (Mahant Swami Pratap Puri Maharaj)


இந்தப் பெயர்களுக்கு மத்தியில், ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியைச் சேர்ந்த மஹந்த் ஸ்வாமி பிரதாப் பூரி மகாராஜின் எதிர்பாராத எழுச்சியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. தேர்தல் காலத்தில் ஒரு குறிப்பிட்ட முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று பிஜேபி முடிவு எடுத்திருந்ததால், இன்னும் முதல்வர் பதவிக்கான களம் திறந்தே உள்ளது. இது மஹந்த் சுவாமி பிரதாப் பூரி மகாராஜுக்கு ஒரு வலுவான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. 


இருப்பினும், முதல்வர் பதவியேற்பு வரை, நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. 2014 முதல் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் வழக்கத்திற்கு மாறான பல முடிவுகளை நாடு பார்த்துள்ளது. ஆச்சரியமான தேர்வுகள் மற்றும் உத்திகள் மூலம் கட்சி மற்றும் தேசம் இரண்டையும் பல முறை இவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். 


மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ