புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் மெட்ரோ ரயில் நேரம் குறைப்பு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்படுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்படுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரவுள்ளது. 2020 ஆண்டை வரவேற்க உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். அதேசமயம் சிலர் டெல்லி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியதாவது.,
புத்தாண்டை முன்னிட்டு, புத்தாண்டு முதல் நாள் இரவு கூட்டத்தை குறைக்க (31 டிசம்பர், 2019) ராஜீவ் ச k க்சவுக் மெட்ரோ நிலையத்திலிருந்து வெளியேற இரவு 9 மணிக்குப் பிறகு அனுமதிக்கப்படாது. இருப்பினும், கடைசி ரயில் புறப்படும் வரை பயணிகளின் நுழைவு அனுமதிக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அன்மை செய்தி, சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN தொலைக்காட்சியை பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.