மத்திய தலைமை கணக்காயராக (சிஏஜி) முன்னாள் உள்துறை செயலர் ராஜிவ் மெஹரிஷி நாளை பொறுப்பேற்க உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அமைப்பானது அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்குமான வரவு மற்றும் செலவுகளை சரிபார்க்கிறது. இந்த கணக்கு அறிக்கையை பார்லிமென்ட் மற்றும் அந்தந்த மாநில சட்டசபைகளில் தாக்கல் செய்கிறது. 


இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் சஷிகாந்த் சர்மாவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ராஜிவ் மெஹரிஷி மத்திய தலைமை கணக்காயராக நாளை பொறுப்பேற்க உள்ளார்.