மக்களவையில் முன் வரிசையில் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி இரண்டாவது வரிசையில் இருக்கையை தக்கவைத்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவையின் இருக்கை ஒதுக்கீட்டில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் கீழ் சபையின் முன் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைவார்கள். 16 ஆவது மக்களவையில் சிங் அதே இருக்கையை தக்கவைத்துள்ளார். இட ஒதுக்கீட்டை மக்களவை செயலகம் புதன்கிழமை (நேற்று) முடிவு செய்தது.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து மக்களவை உறுப்பினரான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடன் முன் வரிசையில் இருப்பார். இருவரும் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்தனர். முன் வரிசையில் உள்ள மற்ற அமைச்சர்கள் டி.வி.சதானந்த கவுடா, அர்ஜுன் முண்டா மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர். ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சட்ட அமைச்சருக்கு அடுத்த இடத்தில் அமர்ந்திருப்பார்.


எதிர்க்கட்சித் தலைவர்களில், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படாததால் எதிர்க்கட்சி பெஞ்சுகளின் முதல் வரிசையில் ஒரு இடம் காலியாக உள்ளது. சபையில் அடுத்த இருக்கை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரிக்கு. UPA தலைவர் சோனியா காந்தி மற்றும் திமுக தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு முதல் வரிசையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் அடுத்தடுத்து அமர்ந்திருப்பார்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு அடுத்தபடியாக பாலு அமர்வார். வயநாடு எம்.பி. ராகுல் காந்தி இரண்டாவது வரிசையில் தொடர்ந்து தனது இடத்தை பிடித்துள்ளார்.


சமாஜ்வாடி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவும் ராகுலின் வரிசையில் அமரவுள்ளார். தேசிய மாநாட்டின் (NC) தலைவர் ஃபாரூக் அப்துல்லாவுக்கு அடுத்தபடியாக அகிலேஷ் அமர்வார். அதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம்.பி. சுப்ரியா சுலே அமர்வார்.


கூட்டாளிகளில், சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் மற்றும் ஜே.டி.யுவின் ராஜீவ் ரஞ்சன் சிங் அல்லது லாலன் சிங் ஆகியோரும் முதல் வரிசையில் அமர்வார்கள்.