INS கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: கடற்படையின் நீருக்கடியில் போர் திறன்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மும்பையில் சனிக்கிழமை இரண்டாவது கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான INS கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


செப்டம்பர் 19 அன்று மும்பையில் உள்ள மசகன் டாக் ஷிபில்டர்ஸ் லிமிடெட் (MTL) INS கந்தேரியை கடற்படைக்கு ஒப்படைத்தது. தாக்குதலுக்கு பயன்படும் ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் கந்தேரி, நீரின் பரப்பில் மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்திலும், நீருக்கடியில் மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கக்கூடியது. தொடர்ச்சியாக 12 ஆயிரம் கிலோமீட்டர், அதாவது 6 ஆயிரத்து 480 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு பயணிக்கக் கூடியது. 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல் டீசலிலும், பேட்டரியிலும் இயங்கக் கூடியது.


தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு, 350 மீட்டர் ஆழத்தில் மூழ்கியபடியே பணியில் ஈடுபடும். இந்த நீர் மூழ்கிக் கப்பலில் 8 அதிகாரிகளும் 35 மாலுமிகளும் இருப்பர். டார்ப்பிடோ (torpedoe) எனப்படும், நீருக்கடியில் இருந்தும் பயன்படுத்த தக்க எஸ்யூடி ரக குண்டுகள், ரேடார் மற்றும் அகச்சிவப்பு கதிர் கருவிகளால் கண்டறியப்பட முடியாத வகையில், கப்பல்களை தாக்கக் கூடிய Exocet ஏவுகணைகள் இந்த நீர்மூழ்கியில் பொருத்தப்பட்டிருக்கும்.



நீருக்கு அடியில் சென்று எதிரிகளின் இலக்கை தாக்குவதற்காக கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு 3 நாட்களே ஆகும் நிலையில், INS கந்தாரி நீர்மூழ்கிக் கப்பல் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் கடற்படையினரிடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்; நமது அரசின் செயல்பாடுகளை பாகிஸ்தான் இப்போது புரிந்து கொண்டிருக்கும். கடற்படையில் INS கந்தாரி போன்ற கப்பலால் கூடுதல், அதிநவீன திறன்களால் மபெரிய பதிலடி கொடுக்கும் திறன் நம்மிடம் உள்ளது. 


INS காநதாரி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கந்தாரி என்பது ஆழ்கடலில் வேட்டையாடும் மீன் வகையை சேர்ந்தது. காஷ்மீரில் நாம் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளுக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் தனக்கு ஆதரவு தேடி பாக்., வீடு வீடாக கதவை தட்டிக் கொண்டிருக்கிறது. கார்டூன் வரைபவர்களுக்கு விஷயம் தருவதற்காக மட்டுமே பாக்கிஸ்தானின் இந்த செயல் பயன்படும் என தெரிவித்தார்.