மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத்  தொகுதியில் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ மக்களவைத் தொகுதிக்கு மே 6ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக ராஜ்நாத்சிங் திறந்த வாகனத்தில் பேரணியாக வந்தார்.


இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜ்நாத் சிங் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோன்று மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.