இந்திய எல்லை குறித்து வரலாற்றை எழுத ராஜ்நாத் சிங் ஒப்புதல்..!
இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்!
இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்!
இந்திய எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்வது தொடர்பாக இந்திய வரலாற்று ஆய்வு கழகம், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆவண காப்பக இயக்குனரகம் ஆகியவற்றுடன் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
இதில் எல்லைகள் குறித்த வரலாறுகளை ஆய்வு செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எல்லைகள் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்ய ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எவ்வாறு எல்லைகள் வகுக்கப்பட்டன, எவ்வாறு எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன, இதில் பாதுகாப்பு படையினரின் பங்கு என்ன?, எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பங்கு என்ன?, அவர்களின் கலாச்சாரம், சமூக - பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கி, பல கோணங்களில் ஆய்வு நடத்த ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
எல்லைகள் தொடர்பான வரலாற்று ஆய்வுகள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்விற்கு பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, திபெத், இலங்கை ஆகியவற்றுடனான எல்லைப் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண வழி கிடைக்கும் என இந்திய அரசு கருதுகிறது. சீனா, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளுடன் தரை எல்லையையும், இலங்கை, மாலத்தீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லையையும் இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சீனா மற்றும் பாக்கிஸ்தானுடன் நீண்ட சர்ச்சைக்குரிய எல்லைகளைக் கொண்டுள்ளது மற்றும் சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு மாறுபட்ட கருத்துக்களால் பல நிலைப்பாடுகளையும் மீறல்களையும் கண்டிருக்கிறது. சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியா திரும்பப் பெறும் என்று அரசாங்கத்தின் பல உயர் அமைச்சர்கள் கூறியிருந்தனர்.