தென் கொரியத் தலைநகர் சியோலில் நடைப்பெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்., தற்காப்புக்காக படைகளைப் பயன்படுத்த இந்தியா ஒருபோதும் தயங்காது என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்தாம் சிங், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அதன் இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் எழும் நிலையில் தற்காப்புக்காக படைபலத்தைப் பயன்படுத்த இந்தியா ஒருபோதும் தயங்காது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது; "இந்தியா அதன் வரலாற்றில் வலுக்கட்டாயமாக சென்று எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது இல்லை. அப்படி ஒரு சம்பவம் எதிர் காலத்திலும் நடைபெற போவில்லை. ஆனால் அதற்காக, இந்தியா தன்னை தற்காத்துக் கொள்ள தன்னுடைய வலிமையை பயன்படுத்தாது என்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.


நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சறுத்தல் எழும் நிலையில் இந்தியா தனது ராணுவ பலத்தைப் பயன்படுத்த ஒருபோதும் தயங்காது. பாதுகாப்பு ராஜதந்திரம் என்பது இந்தியாவின் போர்த்திறன் சார்ந்த வியூக நடவடிக்கைகளில் முக்கிய தூணாக விளங்குகிறது. உண்மையில், பாதுகாப்பு ராஜதந்திரம் மற்றும் படை பலத்தைப் பெருக்குவது என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். எனவே, அவை ஒன்றுடன் ஒன்று கைகோத்து செயல்படுகின்றன.


இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பொருத்தவரையில் வளம் மற்றும் பாதுகாப்பு பொதுவான விதிகளின் அடிப்படையில் ஒழுங்கமைவு செய்யப்பட வேண்டும். கடல், வான் பகுதிகளில் பொதுவான இடங்களைப் பயன்படுத்துவதற்கு எல்லா நாடுகளுக்கும் சமமான அணுகலுக்கான உரிமையை வழங்க வேண்டும். மதிப்பளித்தல், பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் ஆகிய ஐந்து முக்கிய கொள்கைகளைக் கொண்டு நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்" என தெரிவித்துள்ளார்.