ஜம்மு காஷ்மீர் எப்போது பாகிஸ்தானுடையதாக இருந்தது?: ராஜ்நாத் சிங்!
ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தானுக்கும் எந்தவித உரிமையும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்திட்டவட்டம்!!
ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தானுக்கும் எந்தவித உரிமையும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்திட்டவட்டம்!!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மேலும், அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய யூனியன் பிரதேசமான லடாக் பகுதிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; ஜம்மூ காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்றும் அதில் பாகிஸ்தானுக்கும் எந்தவித உரிமையும் இல்லை என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து அவர் பேசுகையில்; “பாகிஸ்தானிடம் நான் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன். அது எப்போது உங்களுடைய பகுதியாக இருந்தது. அதற்கு ஏன் இப்போது கண்ணீர் வடிக்கின்றீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராணுவ அமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதில் இருந்து, அந்த நாட்டின் அடையாளத்தை நாம் மதித்து வருகிறோம். பாகிஸ்தானுடன் இந்தியா நல்ல நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. ஆனால், அவர்கள் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை உண்டு செய்வதை நிறுத்த வேண்டும்.” என்று அவர் கூறினார். மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்தும், அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறித்தும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராக அணிதிரட்ட முயன்று வருகிறது" என அவர் கூறினார்.