மும்பை: மகாராஷ்டிராவில் திடீரென ஏற்பட்ட அரசியல் தலைகீழ் மாற்றத்துக்கு காரணமாக மாநில துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் மீது சிவசேனா (Shivcena) கடுமையாக தாக்கி பேசியுள்ளது. சிவசேனா எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரவுத், என்சிபி தலைவர் சரத் பவாரை அஜித் பவார் ஏமாற்றியுள்ளார் என்று தெரிவித்தார். இப்போது மாநில மக்களுக்கு அஜித் பவார் என்ன பதிலளிப்பார். அவர் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவார் எனக் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் சஞ்சய் ரவுத் கூறுகையில், "நேற்று இரவு 9 மணி வரை, இந்த மகாஷியா (அஜித் பவார்) எங்களுடன் சந்திப்பில் கலந்து கொண்டார், ஆனால் பின்னர் திடீரென்று அவர்கள் அங்கிருந்து காணாமல் போனார்கள். அவர்  முகத்துக்கு நேராக எங்களுடன் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களால் பேசவில்லை, ஆனால் பேசிக் கொண்டிருந்தார். பாவ வ,வழியில் பயணிக்க செல்லும்  நபர்கள், மற்றவர்களுடன் நேருக்கு நேர் பேச முடியாது. அப்பொழுதே என்`எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சந்தேகம் சரி என நிருபிக்கும் வகையில், இன்று அவரது தொலைபேசி இணைப்பு ஆப் செய்யப்பட்டு உள்ளது. 


என்.சி.பி, காங்கிரஸுடன் சேர்ந்து மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்க சிவசேனா தயாராகி வரும் வேளையில், அஜித் பவாரின் நடவடிக்கை மன்னிக்க முடியாது. பாஜகவை ஆதரிக்கும் அஜித் பவாரின் திட்டத்தில் ஷரத் பவாருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களின் பின்புறத்தில் குத்தியுள்ளார் எனவும் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். 


அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் ஷரத் பவார் ஜி ஆகிய இருவரும் இன்று சந்திப்பார்கள். அவர்கள் ஒன்றாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், அஜித் பவாரும் அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.


மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட ஒரு மாத கால நாடகத்திற்குப் பிறகு, சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு, பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இறுதியாக முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.


மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, அவர்களை அஜித் பவார் ஆதரித்தது இருப்பது "அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல" என்று NCP கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இன்று அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது.


முதல்வராக பதவியேற்ற பின்னர், தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா மக்கள் தெளிவான ஆணையை வழங்கியதாக கூறினார். மகாராஷ்டிராவில் நிரந்தர அரசாங்கம் தேவை. இதற்காக, நாங்கள் என்.சி.பியுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளோம். சிவசேனா கட்சியால் தான் மாநிலதித்ல் ஜனாதிபதி ஆட்சியில் வந்தது. சிவசேனா தங்கள் வாக்குறுதிகளை நிராகரித்தார். இதனால் அரசாங்கத்தை அமைப்பதற்காக ஆளுனரை சந்திக்க நாங்கள் உரிமை கோரியுள்ளோம். மாநிலத்தில் நிலையான அரசாங்கத்தை நடத்துவோம் எனக் கூறியுள்ளார்.


மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன.