பாலியல் புகார் கூறி பரபரப்பை உருவாக்கிய நடிகை தனுஸ்ரீ தத்தா மீதே பலாத்கார புகார் கூறப்பட்டுள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டில் பிரபல நடிகையான தனுஸ்ரீ தத்தா, 2004 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். தமிழ் திரையுலகிற்கு தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் அவருக்கு ரசிக்ளர் பட்டாளம் அதிகம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு இவர் அளித்த பேட்டியில், இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களுள் ஒருவரான நானா படேகர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறினார். இந்த புகாரை தொடர்ந்து திரையுலகில் உள்ள பல நடிக்கைகள் அவர்களுக்கு நடந்த வன்கொடுமைகளையும் #MeToo மூலம் தெரிவித்து வந்தனர். 


இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தம்மை பலாத்காரம் செய்து விட்டதாக இந்தி நடிகை ராக்கி சாவந்த் புகார் கூறியுள்ளார். இரவு நேர விருந்து நிகழ்ச்சிக்கு ஒன்று சென்ற போது, தமது வாயில் சிகரெட்டை திணித்து தனுஸ்ரீ புகைக்க வைத்ததாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார். தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் என்றும் அவருக்கு ஆண்களை பிடிக்காது என்றும் பெண்களை மட்டுமே இச்சைக்கு பயன்படுத்துவார் என்றும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.



இதே போல ஒரு நாள் தம்மையும் தனுஸ்ரீ தத்தா பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதனை நீதிமன்றத்தில் கூறி உரிய தண்டனை வாங்கி கொடுக்க உள்ளதாகவும் ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமும் #MeToo புகாரில் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த புகார் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தள்ளது.