ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கல்ராஜ் மிஸ்ராவை இமாச்சல பிரதேச ஆளுநராக நியமிட்டு உத்தரவு பிரப்பித்துள்ளார்.


இதுதொடர்பாக குடியரசு தலைவர் இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பானையில் குறிப்பிடுகையில்., ஆச்சார்யா தேவ்ரத் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு குஜராத் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நியமனங்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதல் ஹிமாச்சல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா தேவ்ரத், மாநிலத்தில் போதைப்பொருள் உட்பட பல சமூக தீமைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட பெருமைக்குரியவர். சுவாரஸ்யமாக, குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்ட அதே நேரத்தில் அவர் நியமிக்கப்பட்டார்.


ஆச்சார்யா தேவ்ரத்-க்கு மாற்றாக ஹிமாச்சல பிரதேச ஆளுநரகா பொறுப்பு ஏற்கும் கல்ராஜ் மிஸ்ரா, முன்பு மக்களவை தேர்தல் 2019-ல் பாஜக சார்பில் போட்டியிட்ட அழைக்கப்பட்டார். ஆனால் மூத்த பாஜக அரசியல்வாதி மிஸ்ரா, தேர்தலில் போட்டியிடுவதற்கு பதிலாக கட்சிக்காக பணியாற்றுவதற்காக தனது நேரத்தை ஒதுக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவர் முன்பு மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சரவை அமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.