நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு!
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர், இந்திய நாட்டின் 14-வது குடியரசு தலைவராகிறார்.
மொத்தமுள்ள 10,98,882 வாக்குகளில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். தே.ஜ கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடுவுக்கு வந்த நிலையில் இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் பார்லிமென்ட் உட்பட 32 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்றது. இதில் 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட தகுதி பெற்றிருந்தனர்.
இந்த வாக்கு எண்ணிக்கை மொத்தம் 8 சுற்று நடைபெற்றது. இந்நிலையில் 7,02,644 லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பெற்று நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ஆகியுள்ளார்.