ராம் கோவில் பிரச்சனைக்கு, பாக்கிஸ்தான் நீண்டகால தடை!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணையை உடனடியாக நடத்தவேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவரும், டெல்லி மேல்–சபை பா.ஜனதா எம்.பி.யுமான சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டை ஏற்கனவே கேட்டு கொண்டிருந்தார். .
இந்நிலையில், ராம் கோவில் பிரச்சனையில் பாக்கிஸ்தான் நீண்டகாலமாக தடைகளை உருவாக்க முயற்சித்து வருகிறது.என்று, சையத் வாசிம் ரிஸ்வி தலைவர் ஷியா வாக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் லஷ்கர்-ஏ-தொய்பா 2005 -ல் ரம்ஜனமின் பூமியையும் தாக்கியது நினைவிருக்கிறதா? என்றும் கேள்வி எழுபியுள்ளார்.
லஷ்கர்-ஏ-தொய்பா தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும். காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.