நித்தியானந்தா கோரிக்கை மனுவை ராம்நகர் நீதிமன்றம் நிராகரித்தது!
பலாத்காரம் உள்ளிட்ட எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந் மற்றும் அவர் சார்ந்த எவரையும் விடுவிக்க இயலாது என கர்நாடக நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
பெங்களூரு: பலாத்காரம் உள்ளிட்ட எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந் மற்றும் அவர் சார்ந்த எவரையும் விடுவிக்க இயலாது என கர்நாடக நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது!
கர்நாடக மாநிலத்தில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தவர் லெனின். ஆரத்திராவ் என்ற பெண்ணை நித்தியானந்தா பலாத்காரம் செய்ததாக இவர் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.
இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 A (மத நம்பிக்கை அவமதிப்பு), 420 (ஏமாற்றுதல்), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான பாலியல்), 506 (i) (கிரிமினல் அச்சுறுத்தல்) மற்றும் 120 பி (கிரிமினல் சதி) என்னும் பிரிவிகளில் கடந்த 2010-ஆம் ஆண்டு ராமநகர பொலிசாரால் 44 வயதான நித்யானந்தாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தாம் 5 வயது தன்மையுடன் இருப்பதாகவும் தன்னை பலாத்கார வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் நித்தியானந்தா மருத்துவ சான்றுடன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பலாத்கார வழக்கு மட்டுமல்ல இதர வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் நித்தியானந்தா மீதான வழக்குகளில் விசாரணை நடத்தப்படும் எனவும் ராம்நகர் நீதிமன்றம் தெரிவித்தது!