இந்துத்துவா, இந்து தீவிரவாதி தொடர்பாக கமல்ஹாசனுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்
தீவரவாதம் என்பது தீவரவாதமே ஆகும். எனவே தீவிரவாதிகளுக்கு மதமோ, கடவுளோ அல்லது சாதியோ கிடையாது.
மும்பை: காந்திஜி கொல்லப்பட்ட காரணத்தினால், நத்தூர் கோட்சே ஒரு தீவிரவாதி என்று கருதுகிறேன் என கூறிய மத்திய மந்திரி.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், மோடியை நாடினால் நல்லது நடக்கும் என சிலர் நினைக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு என்ன தேவையோ, அதை பற்றி தான் பேச வேண்டும். முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன் எனக் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், கமல்ஹாசனின் கருத்துக்கு மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பதிலடி தந்துள்ளார். அவர் கூறியது, தீவரவாதம் என்பது தீவரவாதமே ஆகும். எனவே தீவிரவாதிகளுக்கு மதமோ, கடவுளோ அல்லது சாதியோ கிடையாது.
ஆம் மகாத்மா காந்தியை கொன்றது நாத்ராம் கோட்சே தான். இரண்டு பெரும் இந்து தான். ஆனால் இந்த சம்பவத்தை இந்து தர்மத்தோடு தொடர்பு படுத்தி பார்ப்பது தவறாகிவிடும் ஏற்ப்புடையது அல்ல.
தீவிரவாதி என்பது எந்த இனத்திலும் இருக்கலாம். அது முஸ்லீம், இந்து, கிறிஸ்துவம், தலித் மற்றும் சீக்கியர் ஆகா கூட இருக்கலாம். இதனால் தான் இவர்களை மதத்தோடு ஒப்பிடக் கூடாது. அதனால் தான் நான் இந்த விஷயத்தை ஆதரிக்கவில்லை.
நான் கூட காந்திஜி கொல்லப்பட்ட காரணத்தினால், நத்தூர் கோட்சே ஒரு தீவிரவாதி என்று கருதுகிறேன் எனக் கூறினார்.