சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஹரியானாவின் மற்றொரு சாமியார் மீதான வழக்கில் சிறப்பு கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானா மாநில ஹிசாரில் ஆசிரம் அமைத்து சாமியாராக வலம் வந்தவர் ராம்பால். பொறியாளராக வாழ்க்கையை தொடங்கிய இவர் ஆன்மிகத்தில் இறங்கி பிரபலம் ஆனார் ராமாபால். 


சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவளார்கள், ரோஹ்தக் கிராம வாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்தும், மேலும் பலரை படுகாயமடைய செய்த வழக்கில் சிக்கினர்.


இந்த வழக்கை தவிர்த்து வந்த ராம்பால், சுமார் 43 முறை கோர்ட்டில் ஆஜராகாமலும் தவிர்த்து வந்தார். இதனால், அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டார்.


இதையடுத்து, அவரது ஆசிரமத்தை ஹரியானா மாநில காவல்துறை சுற்றி வளைத்த போது, ராம்பால் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.


அமைதியான முறையில் அவரை கைது செய்ய முடியாது என்று தெரிய வந்ததும், ஆசிரமத்துக்குள் செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் சப்ளையை அதிகாரிகள் துண்டித்தனர். தொடர்ந்து, ஆசிரமதுக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் மீது ராம்பால் ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 


முடிவில், சாமியாரின் ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, சாமியார் ராம்பாலை போலீசார் கைது செய்தனர். 


கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் மீது மொத்தம் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஹிசார் மத்திய சிறையில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு அவர் மீதான வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 


இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு இன்று வழங்கபப்டும் என கோர்ட் அறிவித்துள்ளது.


முன்னதாக, பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார். 


இந்நிலையில் சாமியார் ராம்பால் மீதான மீதான வழக்கின் விசாரணை ஹிஸார் தனி கோர்ட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. 


7 பிரிவுகளில் வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருந்த நிலையில் 426, 427 என இரு பிரிவு வழக்குகளில் அவரை விடுவித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


இருப்பினும், மேலும், ஐந்து வழக்குகளில் தீர்ப்பு அளிக்கும் வரை அவர் சிறையில் தான் இருப்பார் என அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.