உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியா ரஞ்சன் கோகோய் நியமனம்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமனம். வரும் அக்டோபர் 3 ஆம் நாள் பதவியேற்க்க உள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2 ஆம் நாள் ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பெயர் பரிந்துரை செய்தார் நீதிபதி தீபக் மிஸ்ரா. இவர் வரும் அக்டோபர் 3 ஆம் நாள் பதவியேற்க்க உள்ளார்.
இந்நிலையில், இன்று நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய்யை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிபதி ரஞ்சன் கோகோய் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் நாள் குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 12, 2011 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.