Ratan Tata: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அவை அத்தனையும் மறுத்து  வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரத்தன் டாடா அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ள அறிவிப்பில்,"எனது உடல்நிலை குறித்து தற்போது பரவி வரும் வதந்திகள் எனது கவனத்திற்கு வந்தன. மேலும் இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனது வயது மற்றும் உடல்நிலை தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறேன். எனது உடல்நிலை குறித்து எவ்வித கவலைக்குரிய காரணமும் இல்லை. நான் நல்ல மனநிலையுடன் இருப்பதோடு, பொதுமக்களும் ஊடகங்களும் வதந்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில்,"என்னை குறித்து நினைத்ததற்கு நன்றி" எனவும் பதிவிட்டுள்ளார். 


வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி


முன்னதாக, அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி அவரது உடல்நிலை கவலைக்குரியதாக இருப்பதாகவும், அவரது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால், வெளியான அனைத்து தகவல்களையும் வதந்தி என விளக்கமளித்து தான் வயது காரணமாக சில மருத்துவ பரிசோதனைகளை மட்டும் மேற்கொண்டு வருவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.


சமூக வலைதளங்களில் கலக்கும் ரத்தன் டாடா 


மறைந்த பெரும் தொழிலதிபர் ஜம்செட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன் தான் ரத்தன் டாடா. ஜம்செட்ஜி டாடாதான் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷத்பூர் நகரை உருவாக்கியவர் என்றும் அப்போது சிறு சிறு தொழிற்சாலைகளை தொடங்கினார். தற்போது அவரை பெரிய சாம்ராஜியமாக உயர்ந்து நிற்கிறது. ரத்தன் டாடா வாகனம், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, எஃகு தயாரிப்பு, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், முதலீடுகள், விமானப் போக்குவரத்து, இ-காமர்ஸ் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு அவற்றில் தொழில் செய்து வந்தார். 


ரத்தன் டாடா 1991ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை, 2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை என இரண்டு முறை டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டாலும் அதன் அறக்கட்டளைகளுக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய பத்ம விபூஷண் விருதை ரத்தன் டாடா 2008ஆண் ஆண்டு பெற்றார். இவர் தற்போது ஓய்வு காலங்களில் விலங்குகளின் நலன் சார்ந்து இயங்கி வருகிறார். குறிப்பாக, நாய்கள் குறித்தும் அதன் நலன்கள் குறித்தும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 


X தளத்தில் இவரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இந்தியாவிலேயே சமூக வலைதளத்தில் அதிகமாக பாலோயர்களை கொண்ட தொழிலதிபர் இவர் ஆவார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ