ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக அவசியமாகும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் தனிநபர் வருமானத்தை (Per Capita Income) பொறுத்தத்து. தனி நபர் வருமானம், அதாவது நாட்டு மக்களின் வருமானத்தின் சராசரி அளவு இந்த கணக்கீட்டில் மிக முக்கியமாகும். நம் நாட்டைப் பற்றி பேசினால், சமீப காலங்களாக இந்திய மக்களின் வருமானம் அதிகரித்து வருகிறது. ஆனால், சம்பாத்தியம் அதிகரித்த பின்னரும், மக்களின் கையில் பணம் நிற்பதில்லை, அல்லது, கையில் மிச்சப்படும் பணம் மிக குறைவாக உள்ளது. இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது மக்கள் அதிக அளவில் பணத்தை செலவு செய்கிறார்கள், அல்லது தேவை இல்லாத செலவுகளில் வீணாக்குகிறார்கள். இது பொதுமக்களை பொறுத்தவரை மிக முக்கியமான இரு தரவாகும். அதுவும் இந்த விவரம் இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள விவரம் என்பதால் இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். இது பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதாவது ஜிடிபி -யின் அறிக்கையின் படி, சேமிப்பு 13 லட்சம் கோடி என்ற அளவில் குறைந்துள்ளது. இந்த அளவு 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த அளவாகும். இதனால் மக்கள் கடன் வலையில் சிக்கி தவிக்கின்றனர். சேமிப்பை மறந்து, பொழுதுபோக்கிற்காகவும், தேவைகளுக்காகவும் கடன் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் குடும்பச் சேமிப்பில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், குடும்ப சேமிப்பு 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.


மேலும் படிக்க | இந்தியாவில் ரிலையன்சுடன் கைகோர்க்கும் வால்ட் டிஸ்னி ஸ்டார்! ஸ்டார் இந்தியாவும் அம்பானிக்கே


புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?


இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் சேமிப்பு புள்ளிவிவரங்களைப் பார்த்தால், நிகர சேமிப்பு சுமார் ரூ.13 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்காப்பாடுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் மிகக் குறைவு. அதனால் மக்களின் வருமானம் குறைந்துள்ளதா? ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, பணவீக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். உண்மையில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மக்களால் சேமிக்க முடியவில்லை. மாறாக, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன்களை நாடுகிறார்கள்.


பெருகிய கடன் தொல்லை


மக்களின் நிதிப் பொறுப்பு வேகமாக அதிகரித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிறு விஷயங்களுக்கு கூட மக்கள் கடன் வாங்கத் தொடங்கியுள்ளனர். 2021-22 ஆம் ஆண்டில் நிதிப் பொறுப்பு 3.8 சதவீதம் மட்டுமே இருந்தது. இது 2022-23ல் 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நிலம், வீடு, கடை போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் கடன் வாங்குகின்றனர். இது தவிர, திருமணம், தேனிலவு போன்ற ஆடம்பர நோக்கங்களுக்காகவும் கடன் உதவி பெறுகின்றனர். உண்மையில், கொரோனாவுக்குப் பிறகு மக்களின் நுகர்வும் வாங்கும் திறனும் அதிகரித்துள்ளது. மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை என்பதல்ல. ஆனால், வருமானத்துடன் ஒப்பிடும்போது செலவு அதிகரித்துள்ள இந்த நிலைமை கவலையளிக்கிறது.


வருமானம் அதிகரித்து வருகிறது


புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்திய மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் தனிநபர் வருமானம் 2011-12 உடன் ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில், இந்திய மக்களின் தனிநபர் வருமானம் ரூ.72,805 என மதிப்பிடப்பட்டது, இது 2022-23ஆம் ஆண்டில் ரூ.98,374 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: புதிய வதி விரைவில்.. கணக்கில் வரும் அதிக தொகை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ