ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்து வரும் எச்.ஆர்.கான் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைதையொட்டி ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்து அமைச்சவரை நியமனக் குழு அறிவித்துள்ளது.


அதே நேரத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலமும் வருகிறது செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய கவர்னர் யார் என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் பரிசீலனையில் 4 பெயர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.