கிங்பிஷர் ஏர்லைன்ஸின் கணக்கில் மோசடி நடந்ததாக புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக  பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ .50 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் கணக்கில் மோசடி குறித்து வங்கி தாமதப்படுத்தியதாக ஜூலை 10, 2018 அன்று பஞ்சாப் நேஷனல் வங்கி சமர்ப்பித்த மோசடி கண்காணிப்பு அறிக்கை -1 இலிருந்து ரிசர்வ் வங்கி கவனித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ .50 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ஒழுங்குமுறை அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்து குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியால் ரூ .50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


ஒரு கணக்கில் மோசடி செய்ததில் தாமதம் ஏற்பட்டதற்காக ரிசர்வ் வங்கி அதற்கு ரூ .50 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக பாங்க் ஆப் பரோடா தனித்தனியாக தாக்கல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.