ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அவர்கள் வரும் நவம்பர் 19-ஆம் நாள் நடைபெறவுள்ள கூட்டத்தில் தனது பதவியினை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இடையே நிதி விவகாரத்தில் மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் வரும் 19-ஆம் தேதி உர்ஜித் படேல் தனது பதிவியினை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிகிறது.


மத்திய அரசிற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே இணக்கமான உறவு நிகழ்ந்துவந்தாளும், அவ்வப்போது பிரச்சணைகள் எழுவது வழக்கமாகி வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக சுப்பா ராவ் பதவி வகித்த காலத்தில் இது தீவிரமானது. பின்னர் ரகுராம் ராஜன் கவர்னராக இருந்தபோது, உரசல்கள் அதிகரித்தது,, எனினும் இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருந்து வந்தது.


இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும் ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை மத்திய அரசு முழுமையாக மதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு பல்வேறு அழுத்தங்களை ரிசர்வ் வங்கிக்கு அளிக்கிறது எனவும் பகிரங்கமாக குற்றச்சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் தனது கருத்துக்களை பதிவுசெய்தார்.


அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் ஆளும் பாஜக வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் அளிக்கும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இதன்காரணமாக வங்கிகள் கடன் வழங்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வலியுறுத்தி வருகிறது. ஆனால், நாட்டின் நிதிச்சூழல், பணவீக்கம், வாராக்கடன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் வழங்குவதில் பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடைப்பிடித்து வருகிறது.


இந்த விவகாரம் மேலும் ரிசர்வ் வங்கி - மத்திய அரசுகளுக்கிடையே மோதலினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கிக்கு அறிவுரைகள் வழங்க அமைக்கப்பட்டுள்ள இயக்குநர்கள் குழு மூலம் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடிகளை அளித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வாரிய இயக்குநர் குழுவில் உள்ள ஒரு அதிகாரி தெரிவிகையில்... பொருளாதாரத்துக்கு முன்னுரிமை தரக்கூடிய விஷயங்களை ரிசர்வ் வங்கி கவர்னர் ஏற்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டால், அவர் பதவியில் இருந்து விலகிவிடுவது சரியானது எனத் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் வரும் 19-ஆம் நாள் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து உர்ஜித் படேல் பதவி விலகுவார் என நெறுங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.