நிதியியல் கல்விக்கான தேசிய மையத்தின் (NCFE) தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதியியல் கல்விக்கான தேசிய மையம் (NCFE) ஆனது அனைத்து (RBI, Sebi, Irdai மற்றும் Pfrda) நிதித்துறை கட்டுப்பாட்டு நிறுவனங்களுடனும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப் பட்டு வருகிறது.


NCFE-ன் இணைப்பு செயல்முறை பிரிவு (8)-ன் கீழ் தலைமை நிர்வாக அதிகாரி பதவி நிறப்பவுள்ளதாகவும், இப்பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் NCFE அன்று தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.


தேர்ந்தெடுக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரி NCFE நிர்வாக இயக்குநர்களின் மொத்த வழிகாட்டலின் கீழ் செயல்படுவார் எனவும், மூலோபாய தலைமைத்துவத்தை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


NCFE-ஐ தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக மாற்றுவதற்கான செயல்பாடுகளில் தலைமை நிர்வாக அதிகாரி முனைப்புடன் செயல்படும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.


இந்நிறுவனத்தின் தினசரி விவகாரங்கள் தொடர்பாக பொதுமக்கள் மேற்பார்வையையும் கட்டுப்பாட்டு முறையையும் அவர் நடைமுறைப்படுத்தி அதன் நிர்வாகக் குழுவினது முடிவுகளை தேர்ந்தெடுக்கப்படவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி அமுல்படுத்துவார் எனவும் ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கின்றது.


விண்ணப்பதாரர் விதிவிலக்கான தலைமை குணங்கள், நிறுவன கட்டிட திறன்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், அரசு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகள் கொண்டிருத்தல் அவசியமாகிறது. இதுதவிர, புதுமையான தீர்வுகளை கண்டுபிடிக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.


தேர்ந்தெடுக்கப்படும் தலைமை நிர்வாக அதிகாரி மும்பையில் பணியமர்த்தப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது!