ரூ.,.2,000 நோட்டுகள் வெளியிடுவது நிறுத்தம் செய்ததா ரிசர்வ் வங்கி?
2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கையில் உள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதையும் ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி:-
இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும், 13.32 லட்சம் கோடி ரூபாய்க்கு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன.
லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி, 15.78 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளையும் அச்சிட்டுள்ளது.
அச்சிடப்பட்ட நோட்டுகள் மற்றும் புழக்கத்தில் உள்ள நோட்டுகளுடன் 2.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் மதிப்பு நோட்டுகள் புழக்கத்துக்கு வரவில்லை. இதனால் ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியுள்ளது.