ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் மும்பையில் நடைபெற்ற நாணய கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது. 


வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6% நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது. 


அதேபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25% குறைக்கப்பட்டு 5.75% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ரெப்போ வட்டி 6% இருந்தது.


இதனால் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.