நாட்டையே உலுக்கிய பிபின் ராவத் மரணம்... மனித தவறால் ஏற்பட்ட விபத்து - ஷாக் ரிப்போர்ட்
CDS General Bipin Rawat: மறைந்த ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
CDS General Bipin Rawat Death, Helicopter Accident Reason: கடந்த 2021ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த நாடே மிகுந்த சோகத்தில் வாடியது. தமிழ்நாட்டின் குன்னூர் அருகே மலைப்பகுதியில் 2021ஆம் ஆண்டு டிச.8ஆம் தேதி நடந்த அந்த விபத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க இயலாது எனலாம். Mi-17 V5 ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் (CDS General Bipin Rawat), அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில், பாதுகாப்புத்துறையின் ஒரு நிலைக்குழு தனது அறிக்கையை நேற்று மக்களவையில் தாக்கல் செய்த நிலையில், Mi-17 ஹெலிகாப்டர் விபத்து குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குன்னூரில் ஏற்பட்ட அந்த விபத்து மனித தவறால், அதாவது ஹெலிகாப்டரை இயக்கிய விமானப் படையினரால் ஏற்பட்ட தவறு என சுட்டிக்காட்டியுள்ளது.
34 விபத்துகள்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையில் மேலும் பல அதிரவைக்கும் தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்திய விமானப் படை மொத்தம் 34 விபத்துக்களை சந்தித்துள்ளது. அதில் 2021-2022 நிதியாண்டில் மட்டும் 9 விபத்துக்கள் நடந்துள்ளது. அதில் ஒன்றுதான் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் மனித தவறால் விளைந்த Mi-17 ஹெலிகாப்டர் விபத்து.
மனித தவறால் ஏற்பட்ட விபத்து
முன்னரே, ஹெலிகாப்டரை இயக்கியவரின் தவறால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் கூறின. இருப்பினும், தற்போது சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் பாதுகாப்புத்துறையின் நிலைக்குழுவே அது மனித தவறுதான் என உறுதிசெய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து விசாரித்த குழு அதன் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தது என்னவென்றால்,"அந்த பள்ளத்தாக்கு பகுதியில் எதிர்பாராத விதமாக வானிலை மோசமானதாக மாறியதால், ஹெலிகாப்டர் மேகங்களுக்குள் புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்திருக்கிறது. மேகங்கள் விமானிக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியிருக்கிறது"
மேலும் விசாரணைக் குழு விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமான தரவு ரெக்கார்டர், காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டது. விபத்துக்கான சாத்தியமான காரணத்தை கண்டறிய கிடைக்கக்கூடிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்து அந்த குழு அதனை கண்டறிந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்று நடந்தது என்ன?
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானத் தளத்தில் இருந்து ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக்கு கல்லூரியை நோக்கி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் அவர்களுடன் 12 பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் Mi-17 V5 ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். வெலிங்டனில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், குன்னூர் பகுதியில் அந்த கோர விபத்து நடந்தது.
இந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். இருப்பினும் அவரும் ஒரு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைவுக்கு முன்னரே குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பாதுகாப்பு படையின் உயரிய விருதான சௌரியா சக்ரா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | CGHS முக்கிய அப்டேட்: ஓய்வூதியதாரர்களின் மருத்துவ உதவித்தொகை அதிகரிக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ