குஜராத் சட்டசபை தேர்தல் நடைப்பெற்ற ஆறு வாக்குச் சாவடிகளில் இன்று (டிச.,17) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டஸ்கோரி, வாடகம், விராம்கம் சவ்லி ஆகிய பகுதிகளில் இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மையங்களில் உள்ள இயந்திரங்களில் மாதிரி வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகளை அதிகாரிகள் அழிக்க மறந்துவிட்டதே இதற்குக் காரணம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 182 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டுகட்டமாக நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

குஜராத் தேர்தலில் பிரதான போட்டியாளர்களாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி), மற்றும் பிரதான இடத்தை பிடிக்க காங்கிரஸும் கடுமையா போராடி வருகின்றன.

குஜராத் சட்டசபை தேர்தல் நடைப்பெற்ற ஆறு வாக்குச் சாவடிகளில் இன்று (டிச.,17) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.