அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஸ்ட்ரெச்சர் வழங்காததால் போர்வையில் உட்காரவைத்து இழுத்து சென்ற அவலம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு மருத்துவமனையில்  நோயாளிகளை  கொண்டு செல்லும் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் நோயாளி ஒருவரை  துணியில்  வைத்து இழுத்து சென்ற  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மஹாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துமனையில் பெண் நோயாளி ஒருவர்  கால் முறிந்த நிலையில்  சிகிச்சைக்காக அங்கு வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் நுழைந்த அவரை அங்கிருந்து உள்ளே கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சர் இல்லாததால், பெண் நோயாளியின் உறவினர்கள் தாங்கள் கொண்டு வந்த படுக்கைவிரிப்பில் கால் முறிந்த அந்த பெண்ணை அமர வைத்து இழுத்து சென்றனர்.



இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சி அலைகளை  ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்படுமென சம்பவம் நடந்த அரசு மருத்துமனையின் கண்காணிப்பாளர்  சந்திரகாந்த் மஸ்கே தெரிவித்துள்ளார்.