ரிலையன்ஸ் ஜியோவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 4ஜி வோல்ட்இ மொபைல் போன் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூலை 21-ம் தேதி நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் புதிய மொபைல் போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மொபைல் போனுடன் அட்டகாச விலையில் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்படலாம். 


இந்திய 2ஜி வாடிக்கையாளர்களை நேரடியாக 4ஜி சேவைக்கு மாற்றும் விதமாக ஜியோ தனது பீச்சர் போனினை ரூ.500க்கு விற்பனை செய்யும் என கூறப்படுகிறது. ஜியோ சேவைகளுடன் 4ஜி வோல்ட்இ பீச்சர் போன்களை இணைத்து 4ஜி சந்தையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியாவில் ஜியோ மட்டுமே 4ஜி வோல்ட்இ நெட்வொர்க் வைத்துள்ளது, மற்ற போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா உள்ளிட்டவை வோல்ட்இ நெட்வொர்க்கில் வோல்ட்இ சேவையை சோதனை செய்து வருகின்றன.