இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினென்ட் சிவாங்கி பெற்றுள்ளாா்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு முக்கிய மைல்கல்லில், இந்திய கடற்படை சமீபத்தில் தனது முதல் பெண் விமானியை சப்-லெப்டினன்ட் சிவாங்கியுடன் வரவேற்றது. கடற்படையின் முதல் பெண் பைலட்டாக உதவி லெப்டினட் சிவாங்கி நேற்று கொச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். கொச்சி விமானப் படை தளத்தில் பணியில் இணைந்த அவர், டோர்னியர் விமானத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


புதன்கிழமையான இன்று (டிசம்பர் 4) இந்திய கடற்படை தினத்தை நாம் கொண்டாடுகையில், பீகாரில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சப்-லெப்டினன்ட் சிவாங்கியின் எழுச்சியூட்டும் பயணத்தைப் பார்ப்போம். ஷிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்தவர்.  கொச்சி விமானப் படை தளத்தில் பணியில் இணைந்த அவர், டோர்னியர் விமானத்தில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, பாதுகாப்புத் துறை செய்தியாளர்களிடம் கூறுகையில்; கடற்படையில் பெண்களை விமானிகளாக பணியமா்த்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் முடிவெடுத்ததையடுத்து, கடற்படையில் சிவாங்கி கடந்த ஆண்டு பணியமா்த்தப்பட்டாா். அதையடுத்து கடற்படை அகாதெமியில் அவா் பயிற்சி பெற்று வந்தாா். இந்நிலையில், அதி நவீன விமானத்தை தனியே இயக்கி தனது பயிற்சியை சிவாங்கி நிறைவு செய்ததையடுத்து, கொச்சியில் உள்ள கடற்படை பயிற்சி தளத்தில் திங்கள்கிழமை பணியை தொடங்கினாா். 



கடற்படையின் டோா்னியா் கண்காணிப்பு விமானப் பிரிவில் அவா் பணியாற்றவுள்ளாா். கடற்படையின் முதல் பெண் விமானி என்ற பெருமையை சிவாங்கி பெற்றுள்ளாா் என்று செய்தித்தொடா்பாளா் கூறினாா். பிகாா் மாநிலம், முசாஃபா்பூரைச் சோ்ந்த சிவாங்கி, கடந்த ஆண்டு கடற்படையில் இணைந்தாா். கடற்படையில் போா் விமானியாக பணியாற்றவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக சிவாங்கி தெரிவித்தாா்.