குடியரசு தின விழா: சிறப்பு விருந்தினாராக அனைத்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் அழைப்பு

இந்தியாவின் குடியரசு தின விழாவில் அனைத்து ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி: கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளையும் குடியரசு தின விருந்தினராக புது தில்லி அழைத்துள்ளது. அனைத்து மத்திய ஆசிய நாடுகளும் விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. முன்னதாக, 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
புது தில்லி மத்திய ஆசியாவிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளதன் வெளிப்பாடு , இது என்பதோடு, கலாச்சார, நாகரிக மற்றும் வரலாற்று தொடர்புகளையும் இந்நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2015-ல் பிரதமர் மோடி அனைத்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். சோவியத் யூனியன் உடைந்து, ஐந்து குடியரசுகள் உருவான பிறகு, இந்தியா (India) மேற்கொண்ட முதல் பயணம் இது.
டிசம்பர் 18-19 தேதிகளில், மத்திய ஆசிய நாடுகள், இந்திய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு புது தில்லியில் நடைபெறவுள்ளது. மத்திய ஆசிய நாடுகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இடையே நடைபெறும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும். முதல் சந்திப்பு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் ஜனவரி 2019 இல் நடந்தது, இதில் இந்தியாவின் பிரதிநிதியாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். கடந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக இந்த சந்திப்பு காணொலி வாயிலாக நடந்தது.
ALSO READ | Amul: ஜெனரல் பிபின் ராவத் சிப்பாய்களின் நண்பர்; எதிரிகளின் வாள்
தகவல் தொடர்பு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்தியா கடந்த காலத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்களை அறிவித்தது. ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை இணைக்க வேண்டும் என இந்தியா கோரி வரும் நிலையில், இதற்கு மத்திய ஆசிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ALSO READ | தப்லிகி ஜமாத் மீது தடை விதித்தது சவுதி அரேபியா..!!
குடியரசு தினத்தில் விருந்தினர்களை இந்தியா தேர்ந்தெடுப்பது நாடு அல்லது பிராந்தியத்துடன் அதன் நெருக்கத்தைக் காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (2015), பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே (2016), ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசர் பின் சயீத் அல் நஹ்யான் (2017), அனைத்து 10 ஆசியான் நாடுகள் (2018), தென்னாப்பிரிக்காவின் சிரில் ராமாபோஸா (2019) மற்றும் பிரேசிலின் ஜெய்ர் போல்சனாரோ (2020). ஆகியோரை இந்தியா சிறப்பு விருந்தினராக இந்தியா அழைத்துள்ளது.
கடந்த ஆண்டு, இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன் விருந்தினராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக அது நடக்கவில்லை. மத்திய ஆசிய நாடுகளில், கஜகஸ்தான் மட்டுமே 2009 ஆம் ஆண்டில் குடியரசு தின சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளது.
ALSO READ | ‘எலி’யால் தைவானுக்கு வந்த சோதனை - கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR