குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிசோரமில் இன்று நடந்த 70-வது குடியரசு தின நிகழ்ச்சியை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் மிசோரமில் இன்று நடந்த 70-வது குடியரசு தின நிகழ்ச்சியை ஒட்டுமொத்த மக்களும் புறக்கணித்தனர். இதனால் ஏறக்குறைய மக்கள் இல்லா, வெறும் மைதானத்தில் ஆளுநர் கும்மணம் ராஜசேகர் குடியரசு தின உரை நிகழ்த்தினார்.


இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசுப் பணியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர், பொதுமக்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.


குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மிசோரம் மாநிலம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த மசோதாவை நிறைவேற்றும் மத்தியஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 70-வது குடியரசு தின நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி அனைத்து சமூக நல அமைப்புகளும் மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தன. அதன்படி இன்றைய நிகழ்ச்சியில் எந்தவிதமான மக்களும் பங்கேற்கவில்லை.


இந்நிலையில் குடியரசு தின விழா புறக்கணிப்பு அழைப்பின்பேரில் பொதுமக்கள் கலந்து கொள்ளாததால் மிசோரம் ஆளுநர் காலி மைதானத்தை பார்த்து உரையாற்றினார்.