கவுரி லங்கெஷ் கொலைக்கு காரணத்தை அரசு ஆராய வேண்டும் - கவுரி லங்கெஷ் சகோதரர்
கடந்த செப் 6-ஆம் தேதி பிரபல பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான கவுரி லங்கெஷ், தனது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லபட்டார். இவர் கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டது. கர்நாடக அரசு உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
இன்று செய்தியலர்களிடம் பேசிய கவுரி லங்கெஷின் சகோதரர் கூறியது, கவுரி லங்கெஷ் கொலைக்கு காரணமான கொலைகாரர்களை கண்டுபிடித்து, அதன் பின்னால் உள்ள நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என அரசு மற்றும் எஸ்ஐடி(சிஐடி) யிடம் நாங்கள் கோரியுள்ளோம் என கூறினார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம் எனவும் கூறினார்.