இடஒதுக்கீடு மட்டுமே சமூகத்தின் முழுமையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் இடஒதுக்கீடு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியதோடு, சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவில் இருந்து வருபவர்களுக்கு இது முக்கியம் என்றும் கூறினார். இருப்பினும் ஒதுக்கீடு முறையால் அவற்றின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து அவர் பேசுகையில்; ‘சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு முக்கியமானது, இருப்பினும் இடஒதுக்கீடு முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்? அவர் எந்த சாதியையும் சாராதவர். அவர் ஒரு கிறிஸ்தவர். ஆனால் பெரிய இடத்தை அடையவில்லையா? இந்திரா காந்தி சாதியை வைத்து ஆட்சிக்கு வரவில்லையே. இப்போதுக்கூட ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் எல்லா சாதி மக்களின் ஆதரவோடும்தான் ஆட்சி அமைத்துள்ளார்.


ஒரு காலத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழங்கப்பட்டது. நானும் ஆமாம் என்று கூறி வந்தேன். ஆனால், இந்திரா காந்தி, வசுந்தர ராஜே, சுஷ்மா ஸ்வராஜ் எல்லாம் எப்படி இட ஒதுக்கீடு இல்லாமல் முன்னேறினர்?. இந்த கேள்வியைக் கேட்காமல் எப்போதும் நான் இருந்ததில்லை. இட ஒதுக்கீடு அளிப்பதால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறிவிடும் என்பது உண்மையில்லை’ எனக் கூறியுள்ளார்.