இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் ₹20 நோட்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய வங்கியின் தகவல் படி ஏற்கனவே ₹10, ₹50, ₹100 மற்றும் ₹500 ஆகியவற்றின் புதுநேட்டு வடிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேப்போல் ₹200 மற்றும் ₹2,000 நோட்டுகளையும் வெளியிட்டுள்ளது.


மகாத்மா காந்தி (புதிய) தொடரின் கீழ் நவம்பர் 2016 முதல் இந்த புதிய வடிவ ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்வு வழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளை காட்டிலும், புதிதான வெளியான நோட்டுகள் அளவு மற்றும் வடிவமைப்பில் வேறுப்பட்டு இருப்பது அனைவரும் அறிந்ததே.


சமீபத்தில் ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு உத்தரவிட்டதிலிருந்து, இந்த புதிய நோட்டுகளின் தேவை அதிகரித்துள்ளது. அதேவேலையில் மத்திய அரசின் இந்த உத்தரவின்படி பழைய நோட்டுகள் புழக்கமும் முடக்கப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கியின் தரவு படி, 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுமார் 4.92 பில்லியன் ₹20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. மார்ச் 2018-ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 10 பில்லியன்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.