மும்பை: மும்பை சென்ட்ரலில் உள்ள ஷாகுன் வெஜ் உணவகம் (Shagun Veg Restaurant) ஒரு ஐஸ்கிரீம் பாக்கெட்டுக்கு ரூ .10 அதிக கட்டணம் வசூலித்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, மாவட்ட நீதிமன்றம் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மேற்கொண்டதாகக் கூறி ஷாகுன் வெஜ் உணவகத்திற்கு ரூ .2 லட்சம் அபராதம் விதித்தது. மேலும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கூறிய நுகர்வோர் மன்றம், இந்த ரெஸ்டாரண்ட் சுமார் 24 ஆண்டுகளாக இருப்பதால், தினமும் ரூ .40,000-50,000 வரை சம்பாதிக்கிறது, இது நிச்சயமாக எம்ஆர்பியை  (MRP) விட அதிக கட்டணம் வசூலிப்பதன் மூலம் லாபம் ஈட்டியுள்ளது.


ரூ .2 லட்சம் கூடுதல் வைப்புக்கு உத்தரவிட்ட மன்றம், "உணவகங்கள் மற்றும் கடைகளின் இத்தகைய நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுக்கவும், வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும், இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறியது.


ALSO READ | பெண்களே உஷார்; இனி Ice Cream உண்பதற்கு புது கட்டுப்பாடு!


எம்ஆர்பி ரூ .165 என அச்சிடப்பட்ட ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் பாக்கெட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் (Sub-inspector Bhaskar Jadhav)  வாங்கிய போது, விலையை விட 10 ரூபாய் அதிகமாக வைத்து ரூ .175 வசூலித்துள்ளனர். 


இதனையடுது 2015 ஆம் ஆண்டில் தென் மும்பை மாவட்ட நுகர்வோர் நிவாரண மன்றத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் புகார்ற அளித்தார். அந்த புகாரில், டிபி மார்க் காவல் நிலையத்திலிருந்து 2014 ஜூன் 8 ஆம் தேதி இரவு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஐஸ்கிரீம் வாங்க உணவகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டில் விருந்தினர்கள் வந்திருந்ததால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற பேமிலி பேக் ஐஸ்கிரீம் (Ice Cream) பாக்கெட்டை விலைக்கு வாங்கினேன். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம்ம வசூல் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.


இதை விசாரித்த நுகர்வோர் மன்றம், கூடுதல் கட்டணம் நியாயமில்லை என்று கூறி, அந்த உணவகத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தது.