ஆகஸ்ட் 15-க்குப் பிறகு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டது. மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.


காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், சில ஊடங்களில் காஷ்மீர் மக்கள் போராட்டங்களை நடத்துவதாக சில காணொளிகள் வெளியாகின. ஆனால் இது உண்மை இல்லை, போலியானவை என்று போலிஷ் மற்றும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. 


இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் எப்பொழுது இயல்புநிலை தொடரும் என்றும், கட்டுப்பாடுகள் எப்பொழுது தளர்த்தப்படும் என்றும் கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன. 


இந்தநிலையில், இன்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்து உள்ளார். அதாவது, ஆகஸ்ட் 15-க்குப் பிறகு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். அடுத்த 10 நாட்களுக்குள், காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலை பெருமளவில் மீட்கப்படும். தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களை பொருத்தவரை, இது இளைஞர்களை மூளைசலவை செய்வதற்கு பயன்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், எதிரி அதை தங்கள் ஆயுதமாக மாற்ற நாங்கள் விரும்பவில்லை. காஷ்மீரில் நிலைமை இயல்பானதாக மாறியதும், இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைதொடர்புகள் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். 10 நாட்களுக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.