போதைப்பொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு கீழ் செயல்பட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சம் பரிசுத்தொகை வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது, துணை கமிஷனர் அந்தஸ்து அதிகாரிக்கு ஒரு பறிமுதல் சம்பவத்துக்கு ரூ.50 ஆயிரமும், இணை கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், இந்த பரிசுத்தொகையை உயர்த்தி உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, போதைப்பொருள், மனநல மருந்துகளை கைப்பற்றும் அதிகாரி ஒருவர், தனது பணிக்காலம் முழுவதற்கும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் பரிசுத்தொகை பெற தகுதி உடையவர் ஆவார். விதிவிலக்கான சம்பவங்களில், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும். ஆய்வுக்கூட பரிசோதனையில், போதைப்பொருள் உறுதி செய்யப்பட்டவுடனே, பரிசுத்தொகையில் 50 சதவீதம் வரை கிடைக்கும்.