ஹரியானாவின் ரிவாரி மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி மாலை பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த
கல்லூரி மாணவியை வழிமறித்து காரில் வந்த 5-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் மாணவியை கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்ப்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தயார் கூறுகையில், சிபிஎஸ்இயில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக குடியரசுத் தலைவர், பிரதமரிடம் பாராட்டுப் பெற்ற தமது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவோம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற பிரதமரின் கூற்று எப்படி சாத்தியமாகும் என அவரது தாயார் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.


ஆனால் இதுக்குறித்து பிரதமர் மோடி, இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்த கொடூரமான சம்பவத்திற்கு பிறகும், பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:-


ஹரியானாவில் நடைபெற்ற கூட்டு பலாத்காரம் சம்பத்திற்கு இந்தியா வெட்கி தலை குனிய வேண்டும். 


பிரதம மந்திரி, உங்கள் அமைதி ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவின் பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கும், கற்பழிப்புக்கள் செய்பவர்கள் சுதந்திரமாக சுற்றி திரிய அனுமதிக்கிறதுக்கு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.