Viral Video: டெல்லி - தேசிய தலைநகர் பகுதியில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. பருவமழையின் வருகை தேசிய தலைநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு ஒரே இரவில் பெரு மழையை கொண்டு வந்தது. தென்மேற்கு பருவமழை மும்பை மற்றும் டெல்லிக்கு மேல் முன்னேறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், மழைக்காலத்தின் முன்னேற்றம் காரணமாக மழை பெய்து வரும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் தண்ணீர் தேக்கம், போக்குவரத்து நெரிசல் மற்றும் பிற மழை தொடர்பான விபத்துக்கள் மற்றும் துயரங்கள் நேர்ந்துள்ளன.


பருவமழை தற்போது தாமதமாக தொடங்கிய நிலையில், தற்போது வேகமாக முன்னேறி, முழு மகாராஷ்டிரா, முழு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிசா, வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பீகார், கிழக்கு உத்தரபிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள், ஹரியானாவின் சில பகுதிகள், இப்போது டெல்லியும் கூட கடுமையான பாதிப்புகளை உள்ளடக்கியுள்ளது.


வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்


அந்த வகையில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று பெய்த கனமழையால் ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பஞ்ச்குலாவில் உள்ள காரக் மங்கோலி என்ற ஆற்றின் கரையில் ஒரு பெண் தனது காரை நிறுத்தியிருந்தார் என கூறப்படுகிறது. ஆனால், கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. 



வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்த அந்த பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரேன் உதவியுடன் வாகனத்தை ஆற்றில் இருந்து அகற்றும் முயற்சி நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பலருக்கும் மிரட்சியை ஏற்படுத்துகிறது. 


மேலும் படிக்க | முன்னாள் துணை முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென சரிந்து விழுந்த மேடை


டெல்லியில் துயரம்
 
அதேபோல், புது டெல்லி  ரயில் நிலையத்தில் இன்று காலை தண்ணீர் தேங்கிய பகுதியில் மின்கம்பத்தைத் தொட்ட பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயர நிகழ்வும் நடந்துள்ளது. புது டெல்லி ரயில் நிலையத்தில், டாக்ஸி ஸ்டாண்டிற்கு அருகில் உள்ள பஹர்கஞ்ச் பக்க நுழைவாயிலில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் கவனிக்கப்படாத இருந்த கம்பி விபத்துக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சாக்ஷி அஹுஜா என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட பெண், ரயில் பிடிப்பதற்காக அதிகாலை 5 மணியளவில் ரயில் நிலையத்தை அடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது. அவருடன் மேலும் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.


கனமழை தொடரும்


தென்மேற்கு பருவமழை தற்போது சுறுசுறுப்பாக இருப்பதாகவும், மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதையும் உள்ளடக்கியதாகவும் இந்திய வானிலை மையத்தின் பொது இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளிலும் பருவமழை வந்துள்ளது என்றும் அடுத்த இரண்டு நாட்களில் இது முன்னேறும் என்றும் மற்ற பகுதிகளையும் உள்ளடக்கும் என்றும் மொஹபத்ரா கூறினார்.


டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று மொஹபத்ரா மேலும் கூறினார். "மும்பை பகுதியில் அதிகபட்சமாக 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இன்றும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மத்திய இந்தியாவில் பருவமழை தீவிரமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார். 


மேலும் படிக்க | கொடூரம்! பாத்ரூமில் யார் முதலில் குளிப்பது என சண்டை... அண்ணனை அடித்தே கொன்றே தம்பி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ