நில தகராறில் தொழிலாளரை அறைந்த பிஹார் மாநில் ராஷ்டிரிய ஜனதா தள MLA மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஹார் மாநிலம் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரஹால்ட் யாதவ், தொழிலாளர் ஒருவரை கண்ணத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட யாதவ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


நேற்றைய தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஆஷிஸ் குமார் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வீட்டை  சுற்றி எல்லை சுவர் எழுப்ப விரும்பிய ஆஷிஸ் குமாரிடம் குற்றம்சாட்டப்பட்ட யாதவ், மேலும் 19 பேர் ரூ.5 லட்சம் கோரி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.



இதனையடுத்து காவல்துறை உதவியை நாடிய ஆஷிஸ் குமார், எழுத்து பூர்வமான புகாரினை காவல்நிலையத்தில் சமர்பித்துள்ளார். நலதகராறு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் யாதவ் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், சரமாறியாக தாக்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


குமாரின் புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி நிரன்ஜன் சின்ஹா, யாதவ் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.