உன்னாவ்: உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிஐ வாக்குமூலம் வாங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உன்னாவ் கற்பழிப்பு வழக்கு வழக்கில் முதல் எஃப்.ஐ.ஆர் விசாரணை முடிந்தது. எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவரின் சாட்சியை பதிவு செய்த பின்னர் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அறிக்கையை தயார் செய்து வருகிறது. விரைவில் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.


உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் எஃப்.ஐ.ஆர் பாதிக்கப்பட்டவரின் தாயார் 20 ஜூன் 2017 அன்று பதிவு செய்தார். கான்பூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கும்பல் ஒன்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அந்த அடிப்படியில் சுபம் சிங், நரேஷ் திவாரி மற்றும் பிரிஜேஷ் யாதவ் ஆகியோருக்கு எதிரான சிபிஐ விசாரணை முடிவடைந்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் முன்னதாக கைது செய்யப்பட்டனர். ஆனால் குறுகிய காலத்தில் மூவரும் ஜாமீனில் வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, ஐபிசியின் 120 பி, 363, 366, 376 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அடுத்து ஐபிசியின் 34, 147, 148, 149, 323, 504, 506 மற்றும் 302 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு (அதுல், வினீத், பவுவா, சோனு சஷி, சுமன்) எதிராக இரண்டாவது குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது. அதன்பின்னர் எம்.எல்.ஏ செங்கர் மற்றும் 9 பேர் மீது மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.