பிளாஸ்டிக் கழிவு கொண்டு சாலை அமைப்பு: அசத்தும் BPCL
இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனையில் சுமார் 35 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நோய்டா: பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சாலை நீட்டிப்பு பணிகள் நோய்டாவில் வியாழக்கிழமை தொடங்கின. இந்த பாணியில் சாலை நீட்டிக்கப்படுவது நாட்டிலேயே இது முதன்முறையாகும். இந்த 500 மீட்டர் நீள சாலை, நோய்டா அதிகாரசபையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கி வரும் ஒரு பணித்திட்டமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோய்டா-கிரேட்டர் நோய்டா அதிவேக நெடுஞ்சாலையில் பிரிவு 129 இல் உள்ள ஒரு சேவை பாதையில் இந்த சாலை நீட்டிப்பு வருவதாக அதிகாரசபையின் பொது மேலாளர் ராஜீவ் தியாகி தெரிவித்தார். இந்த திட்டத்தின் வெற்றி பிளாஸ்டிக் கழிவுகளின் (Plastic Waste) பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நோய்டா (Noida) ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிது மகேஸ்வரி விழாவின் படங்களை ட்வீட் செய்துள்ளார்:
“இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சோதனையில் சுமார் 35 டன் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலையின் செயல்திறன் கண்காணிக்கப்படும். மேலும் திருப்திகரமாக இருந்தால், அடுத்த நிலை வரை நீட்டிக்கப்படும்” என்று தியாகி கூறினார்.
"முழு இந்தியாவிலும் (India), சாலை கட்டுமானத்திற்காக பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட தொகுதிகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இது நோய்டாவில் நடக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்தியா ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 26,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இது உலகளவில் 15 வது பெரிய பிளாஸ்டிக் (Plastic) மாசுபடுத்தியாகும். கடந்த ஆண்டு, தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடியே (Narendra Modi) இந்தியர்களிடம் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை விலக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR