புதுடெல்லி: ரோமியோ ஜூலியட் சட்டத்தில் சிறுவர்களுக்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ரோமியோ ஜூலியட் சட்டத்தில் இருந்து விலக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  ரோமியோ ஜூலியட் சட்டம் தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் படி, 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. சரி, இந்த ரோமியோ ஜூலியட் சட்டம் என்ன என்று தெரியுமா? தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோமியோ ஜூலியட் சட்டம் 


பெரும்பாலும் பதின்ம வயது பெண், மேஜர் ஆகாதவர் (18 வயதுக்கும் குறைந்தவர்) பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொண்டு கர்ப்பமானால், அதற்கு காரணமான ஆண் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொதுவாக, பதின்ம வயதுடைய சிறுமியும், சிறுவனும் பாலியல் உறவு வைத்துக் கொண்டால், தங்கள் மகள் ஏமாற்றப்பட்டதாக சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்த விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டால், சிறுவன் (16 முதல் 18 வரையுள்ள ) சிறைக்கு அனுப்பப்படுகிறார். பதின்ம வயதுரைய இருவரும் மனமொத்து உறவு கொண்ட நிலையில், சிறுவனை மட்டும் பலாத்கார குற்றத்திற்காக தண்டிப்பது தவறு என்ற விவாதம் நடந்து வருகிறது.


சட்டம் சொல்வது என்ன?


தற்போது, ​​18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர் உடல் ரீதியில் உறவு கொண்டு பெண் கர்ப்பமானால், கர்ப்பத்திற்கு காரணமானவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படும் என சட்டம் கூறுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க POCSO சட்டம், இந்தியாவில் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி, பெண் மனபூர்வ சம்மதத்துடன் உறவு கொண்டிருந்தாலும் அதை சட்டம் பொருட்படுத்தாது.


மேலும் படிக்க | மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு! மாநில டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு


சட்டப்பிரிவு 376 


சிறார்களுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டால், அது குற்றமாக கருதப்படும். அதேபோல சட்டப்பிரிவு 376 பற்றி பேசினால், 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரில் உறவை ஏற்படுத்தினாலும், அதற்கு உறவு கொண்டவரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுவன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்


ரோமியோ ஜூலியட் சட்டம் என்றால் என்ன?


பதின்ம வயதுடைய சிறுமியும், சிறுவனும் பாலியல் உறவு வைத்துக் கொள்வது பற்றிய மனுவில், சிந்தித்து செயல்படும் அளவுக்கு இன்றைய சிறார்கள் புத்திசாலிகள் என கூறப்பட்டுள்ளது. ரோமியோ-ஜூலியட் சட்டத்தின் கீழ், சிறுவனுக்கு சில சூழ்நிலைகளில் மட்டுமே நிவாரணம் கிடைக்கிறது. பையனுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம் என்றால், அதாவது பெண்ணுக்கு 13 வயது, பையனுக்கு 18 வயது என்பது போல. அதாவது 4 வருட வயது இடைவெளி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பலாத்கார வழக்கு போடலாம்.


பரஸ்பரம் விரும்பி உடலுறவு


பரஸ்பரம் விரும்பி உடலுறவு கொள்ளும் சூழ்நிலையிலும், போக்சோ சட்டத்தால், ஒரு தரப்பினர் பல சிரமங்களை சந்திக்க நேரிடுவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க - மணிப்பூரில் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை வீடியோ எடுத்தவர் கைது


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து


16-18 வயதுக்குட்பட்டவர்கள் மனம் விரும்பி ஒப்புதலுடன் உடலுறவு கொண்டாலும், சட்டத்தில் அதை நாம் குற்றமாகக் கருதுவதால், கைதான சிறுவனை பாலியல் குற்றவாளிகள் போல நடத்த வேண்டி இருக்கிறது. அதனால் அரசாங்கம் உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்திருந்தார். 


போக்சோ சட்டத்தின் நோக்கம்


போக்சோ சட்டத்தின் நோக்கம் என்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளை பாதுகாத்து, பாலியல் அத்துமீறல்களை ஒழிப்பதுதானே தவிர, இருவர் மனம் விரும்பி காதலிக்கும் போது அவர்களை பிரித்து, சம்மந்தப்பட்ட சிறுவனை மட்டும் சிறையில் அடைப்பது அல்ல என்று ஒரு வழக்கில் கடந்த ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் கூறியதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


ஆனால், இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் பேசும்போது, பாலியல் இசைவுக்கான வயது வரம்பை குறைக்கும் திட்டத்தில் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரோமியோ ஜூலியட் சட்டத்தில் மாற்றங்கள் வருமா என்பதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்யமுடியும்.


மேலும் படிக்க | நான் மட்டும் அமெரிக்க அதிபரானா? கனவு காணத் தொடங்கிய டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ