புது டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தேசிய தலைநகரில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையின் அறிக்கையின்படி, அவர் வழக்கமான சோதனைகள் மற்றும் விசாரணைகளுக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் டி.எஸ்.ராணா தெரிவித்தார்.


ALSO READ | ‘மக்களிடம் உண்மையை கூறுங்கள்’; பிரதமரிடம் சோனியா காந்தி வலியுறுத்தல்!


முன்னதாக பிப்ரவரியில், காங்கிரஸ் தலைவர் (Congress president) இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது என்றும் மருத்துவமனை தெரிவித்தது. அவருடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இருந்தனர்.


 



உடல்நலக்குறைவு காரணமாக, அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் யூனியன் பட்ஜெட் குறித்தான விளக்க உரையில் கலந்து கொள்ள முடியவில்லை. எவ்வாறாயினும், அவர் பட்ஜெட் அமர்வின் முதல் நாளில் கலந்து கொண்டார் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act) எதிராக கட்சியின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.


ALSO READ | BJP-யால் சமூக நல்லிணக்கத்திற்கு "பெரும் சேதம்" ஏற்பட்டுள்ளது: சோனியா!