PNB மோசடியின் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை, அதற்குள் மற்றொரு மோசடி வழக்கு குறித்து CBI வழக்கு பதிந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கியில் கடன் வாங்கி திரும்பச்செலுத்தாது தொடர்பாக RP Infosystem நிறுவனத்தின் மீதும், அந்நிறுவன இயக்குனர்களின் மீதும் இன்று CBI வழக்கு தொடர்ந்துள்ளது.


இந்த மோசடியின் மதிப்பு சுமார் 515.15 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


RP Infosystem-ஆனது கொல்கத்தா-வினை மையமாக கொண்டு இயங்கும் கணினி மற்றும் கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.



பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ரூ.1,300 கோடி மோசடி செய்ததாக நிரவ் மோடியின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் அதிர்வலைகள் இன்னும் நாட்டை விட்ட ஓயவில்லை, அதேப்போல் ரோட்டோமக் நிறுவன ஊழல் குறித்தும் பல விவகாரங்கள் கேள்விகுறியாகவே இருக்கும் நிலையில் தற்போது அடுத்த ஊழல் வழக்கு உதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.