ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு தலா ரூ.100 கோடி ரூபாய் பரிசு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக வளாகத் தில் சிறுவர்கள் அறிவியல் மாநாட்டை சந்திரபாபு நாயுடு நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


அப்பொழுது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:


பல திறமைசாலிகள் இருந்தும் நோபல் பரிசு வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்கும் விஞ்ஞானி களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும். இளைஞர்கள் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அவர் கூறினார்.