புதுடெல்லி: இந்தியாவில் புழங்கும் கருப்பு பணத்தை கண்காணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளிடப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ ஜி.பி.எஸ் (GPS) சிப் உள்ளடிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்பணத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அரசு முடிவு செய்துள்ளது.


மேலும், புதிதாக வெளிவரயிருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ ஜி.பி.எஸ் (GPS) சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் மற்றும் பதுக்கல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும் என தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அதனால், ஜி.பி.எஸ் (GPS) சிப் உதவியுடன் புதிய 2000 ரூபாய் கறுப்பு பணம் எதிராக போராடுமா? பொறுத்திருந்து பார்போம்.