ஆந்திராவில் தற்போது முட்டை பப்ஸ் தான் முக்கிய பேசுபொருளாக மாறி உள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் தலைமை செயலகத்தில் ஊதாரித்தனமாக நிறைய செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்எஸ்ஆர்சிபிக்கும் இடையே தேர்தலுக்கு பின்னும் நிறைய காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, தெலுங்கு தேசம் சார்பில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றார். தேர்தல் முடிந்ததில் இருந்தே இரண்டு கட்சிக்கும் பிரச்சனை நிலவி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!


கடந்த 2019ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியை வெளியேற்றி ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றார். இளம் முதல்வராக பலராலும் பாராட்டபட்ட இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சந்திரபாபு நாயுடு மீது பல வகைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவரின் அலுவலகம் பொது இடத்தில் கட்டப்பட்டதாக இடிக்கப்பட்டது. இதே போன்று பல்வேறு குற்றசாட்டுகள் சந்திரபாபு நாயுடு மீது வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே நிலை ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஏற்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் ஊதாரித்தனமான நிறைய செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், முட்டை பஃப்ஸிற்காக முதல்வர் அலுவலகம் 3.62 கோடி ரூபாய் செலவிட்டதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.


இந்த தொகையை கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.72 லட்சம் முட்டை பஃப்ஸ் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு முட்டை பஃப் விலை சுமார் 20 ரூபாய் என்று வைத்தால் கூட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 18 லட்சத்திற்கும் அதிகமான முட்டை பஃப்ஸ் வாங்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் 1000 முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளது என்று தெலுங்கு தேசம் குற்றம்சாட்டி உள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி இதனை முட்டை பஃப்ஸ் ஊழல் என்று தெரிவித்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இதே போன்று நிறைய பணம் முறைகேடாக செலவு செய்யப்பட்டுள்ளது பற்றி விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக தெலுங்கு தேசம் தெரிவித்துள்ளது.



மேலும் ருஷிகொண்டா மலையில் மக்கள் பணத்தில் தனிப்பட்ட அரண்மனையை கட்டியதாகவும், சொந்த பயணத்திற்காக அரசு செலவில் சிறப்பு விமானங்களை பயன்படுத்தியதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி மீது முன்னர் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஜெகன் மேகன் ரெட்டியின் புகழை கெடுக்கும் விதமாக தான் இது போன்ற பொய்யான குற்றசாட்டுகள் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. 2014 மற்றும் 2019க்கு இடையில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் தின்பண்டங்களுக்காக ரூ 8.5 கோடி செலவு செய்து உள்ளனர் என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு - வெளியான பரபர தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ